Breaking News

ஜனாசாக்கள் எரிக்கப்படுவதற்கு எதிராக அலி ஸாஹிர் மௌலானாவினால் உச்ச நீதி மன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு நாளை விசாரணைக்கு ...

அல்ஹம்துலில்லாஹ் 🤲 

Covid-19 வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களது ஜனாசாக்களை, சர்வதேச வழிமுறைகளையும், சமய விழுமியங்களையும் தாண்டி சுகாதார அமைச்சின் வர்த்தமானிக்கு அமைவாக எரியூட்டப்படுவதற்கு எதிராக  முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானாவினால் உச்சநீதி மன்றில் கடந்த மே மாதம் தாக்கல் செய்யப்பட்ட  அடிப்படை உரிமை மீறல் மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

இலங்கை ஜனநாயக குடியரசின் அரசியலமைப்பின் 17மற்றும் , 126ஆவது ஷரத்துக்களின் பிரகாரம் அரசியலமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் மீறப்படுவது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அணில் ஜெயசிங்க , சுகாதார சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க , சட்ட மா அதிபர் தப்புல டீ லிவேரா ஆகியோரை பிரதிவாதிகளாக கொண்டு குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணிப்பவர்களது  ஜனாசாக்களை அவர்களது சமய அனுஷ்டானங்களோடு அடக்கம் செய்வதற்கு மாற்றமாக உலகிலே எந்த ஒரு நாட்டிலும் பின்பற்றப்படாத வகையில் இலங்கையில் மாத்திரம் உடலங்கள் எரியூட்டப்படும் செயற்பாடு தொடர்பில் ஆரம்பம் முதலே சமூக ஊடகங்கள் மற்றும் சர்வதேச ஊடகங்கள் வாயிலாகவும் தமது  எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே கடந்த மே மாதம் அலி ஸாஹிர் மௌலானா அவர்களால் வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விடயம் தொடர்பில் அலி ஸாஹிர் மௌலானா உட்பட ஏனைய சிலராலும் பிரத்தியோகமாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு வரும் நிலையில் நீதியை வேண்டிய பயணம் வெற்றி பெற பிரார்த்திப்போம்.



No comments

note