ஈரானை தாக்குவதற்கு திட்டமிட்ட அமெரிக்க ஜனாதிபதி ? ஈரானிடம் அணு ஆயுத இருத்தலுக்கான நியாயப்பாடுகள்.
கடந்த வருட இறுதியில் ஈரான்மீது தாக்குதல் நடாத்தி அதன் அணு உலைகளை அழித்தொழிப்பதற்கு அமெரிக்க இயந்திரங்கள் திட்டமிட்டிருந்தன. ஆனால் அதற்கு ஜனாதிபதி ட்ரம்ப் உடன்படவில்லை. அதனாலேயே அமெரிக்க இயந்திரங்கள் திட்டமிட்டு ட்ரம்பை தோற்கடித்தனர். என்று கடந்த வாரம் கட்டுரை வெளியிட்டிருந்தேன்.
அந்த கருத்தோடு சம்பத்தப்பட்ட செய்திகள் நேற்று சர்வதேசத்தின் கவனத்தினை ஈர்த்தது. அதாவது தனது முக்கிய ஆலோசகர்களை அழைத்து ஈரான் மீது தாக்குதல் நடத்துவது பற்றி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீவிர ஆலோசனை நடாத்தியுள்ளார்.
ட்ரம்பின் கருத்துக்களை கேட்ட ஆலோசகர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன், ஈரான் மீது தாக்குதல் நடத்தும் திட்டத்துக்கு உடன்படவில்லை. இந்த சூழலில் தாக்குதல் நடத்தினால் அது சர்வதேச ரீதியில் அமெரிக்காவுக்கு ராஜதந்திர சிக்கலை ஏற்படுத்துமென்று எடுத்துக்கூறியதாகவும், அதனால் அந்த திட்டம் கைவிடப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.
முன்னாள் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் போன்ற தீவிர போக்குடையவர்கள் இந்த சந்தர்ப்பத்தில் ட்ரம்ப்போடு இருந்திருந்தால் ஈரான் மீது தாக்குதல் நடாத்துவதற்கு உடன்பட்டிருப்பார்கள்.
ஏனெனில் கடந்த வருடம் ஈரான் மீது தாக்குதல் நடாத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்திருந்தும், இறுதி நேரத்தில் ட்ரம்ப் வழங்கிய உத்தரவினாலேயே அந்த திட்டம் கைவிடப்பட்டது. இதனாலேயே ஜோன் போல்டன் போன்ற பல தீவிர போக்குடையவர்கள் ட்ரம்பை விட்டு விலகி எதிர் அணியில் இணைந்து கொண்டார்கள்.
ஜனாதிபதி ட்ரம்பின் அரசியல் செயல்பாடுகள் அமெரிக்க மக்களை கவர்ந்திருந்தாலும், தீவிர இஸ்லாமிய எதிர்ப்பு நிலைப்பாட்டிலுள்ள கொள்கை வகுப்பாளர்களை கவரவில்லை.
இவ்வாறான தீவிர போக்காளர்களை கவர்வதற்காகவும், ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்ளாத நிலையில், ஈரான்மீது தாக்குதல் நடாத்தி கவனத்தை திசை திருப்புவதன் மூலம் போர்ச்சூழலில் தொடர்ந்து தான் பதவியில் அமர்வதற்கான தந்திரோபாயமாகவும் இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
யுரேனியம் செறிவூட்டலில் ஈரான் முன்னேறியுள்ளதாகவும், அது எந்த நேரத்திலும் அணு ஆயுதம் தயாரிக்கும் ஆற்றலுடன் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பில் ஈடுபடுவதாக பல வருடங்களுக்கு முன்பே இஸ்ரேல் எச்சித்திருந்தது.
ஈரானிடம் அணு ஆயுதம் தயாரிக்கும் ஆற்றல் உள்ளதென்று கூறப்பட்டாலும், ஏற்கனவே அது அணு ஆயுதங்களை தயாரித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேலிடம் மட்டுமே அணு ஆயுதம் உள்ளது. இதனாலேயே சுற்றியுள்ள அனைத்து இஸ்லாமிய நாடுகளையும் இஸ்ரேல் மிரட்டி வருகின்றது.
ஈரான் அணு ஆயுதம் தயாரித்தால், அது மத்திய கிழக்கு நாடுகளில் முதன் முதலில் அணு ஆயுதங்களை தயாரித்த இஸ்லாமிய நாடு என்ற அந்தஸ்தை பெறுகின்றது. இதனை ஏனைய அரபு நாடுகள் விரும்பாது.
மத்திய கிழக்கிலுள்ள துருக்கியில் அணு ஆயுதங்கள் இருந்தாலும், அது துருக்கிக்கு சொந்தமானதல்ல. மாறாக அது அமெரிக்காவுக்குரியதகும். அதனை துருக்கியால் பயன்படுத்த முடியாது.
எனவேதான் மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல் அணு ஆயுதங்களை கொண்டுள்ளதனால், அணு ஆயுத சமநிலையை பேனும்பொருட்டு, புனித மஸ்ஜிதுல் அக்ஸாவை மீட்கும் பாலஸ்தீன போராட்டங்களுக்கு நேரடியாக உதவி செய்துவருகின்ற ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரதும் நிலைப்பாடாகும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments