Breaking News

ஓய்வு பெற்ற நவாஸ் ஆசிரியரை கௌரவித்தது புத்தளம் வலயக் கல்வி பணிமனை.

மூத்த ஆசிரியரும், புத்தளம் ஆசிரியர் வாண்மை நிலையத்தில் பல வருட காலம் முகாமையாளராக கடமையாற்றிய எம்.எச்.எம். நவாஸ் ஆசிரியர் கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வு புத்தளம் வலய கல்விப்பணிப்பாளர் டப்லிவ்.பீ.எஸ்.கே. விஜேசிங்க தலைமையில் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி அஸ்வர் மண்டபத்தில் (13) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்விப் பணிப்பாளர்கள், பாட இணைப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், கலந்து சிறப்பித்தனர். இதன் போது 41 வருட காலம் ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெறும் எம்.எச்.எம். நவாஸ் ஆசிரியருக்கு புத்தளம் வலய கல்வி பணிப்பாளர் பொன்னாடை அணிவித்து, நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவித்தார்.















No comments

note