Breaking News

சாய்ந்தமருதை சேர்ந்த கலைமகள் ஹிதாயா ரிஸ்வி திங்கட்கிழமை இரவு சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் காலமானார்...!!!

நூருள் ஹுதா உமர்

தமிழ் இலக்கிய ஆளுமைகளில் ஒருத்தியாக தன்னை சர்வதேசம் வரை அடையாளப்படுத்திக் கொண்ட கவிதாயினி கலைமகள் ஹிதாயா ரிஸ்வி திங்கட்கிழமை (23) இரவு சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் வபாத்தானார்.

மருதூரில் பிரகாசித்த பெண் ஆளுமைகளில் ஒருவரான இவர், பெண்களின் கல்வி, உரிமைகள், சமூகப் பிரச்சினைகளை தனது எழுத்தால் வெளிக்கொணர்ந்து, தீர்வுகளை பெற்றுக் கொடுக்க அயராது பாடுபட்ட ஒருவர். எமது நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் பல விருதுகளை வென்றுள்ள அன்னாரின் இழப்பு இலக்கிய உலகத்திற்கும் மருதூருக்கும் பேரிழப்பு என பிரதேச கலை, இலக்கிய, ஊடகர்கள் பலரும் அனுதாபம் வெளியிட்டுள்ளனர்.



No comments

note