Breaking News

கட்டாக்காலி மாடுகளால் பொது மக்கள் அவதி

ஐ.எல்.எம் நாஸிம்

அம்பாறை மாவட்ட சம்மாந்துறை  பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீதிகளில் தூங்கும் கட்டாக்காலி மாடுகளால் விபத்துக்கள் ஏற்படக் கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சம்மாந்துறை பிரதேச சபையிடம் சுட்டி காட்டிய போதும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மழை தொடங்கியுள்ள நிலையில் சம்மாந்துறை விளினையடி சந்தி,நெல்லுப்பிடிச் சந்தி போன்ற சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இரவு மற்றும் காலை வேளைகளில் கட்டாகாலி மாடுகள் வீதிகளில் நிற்பதால் போக்குவரத்துக்கு தடயைாக உள்ளதாகவும், இதனால் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

எனவே, பிரதேச சபை ஆக்க பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரியுள்ளனர்.







No comments

note