Breaking News

இறப்பதற்கு எப்போதும் அஞ்சியவர்கள் அல்லர் நாம் இப்போது அஞ்சுகிறோம் நாம்

இறந்தால் எரித்து  விடுவார்கள் என்ற அச்சத்தில்
நாம் இறந்தால் எரித்து விடுவார்கள் என்ற அச்சத்தில்

பிறக்கும்போதே தெரிந்து விட்டது நாம் ஒருநாள் இறந்து விடுவோம் என்று

என்றோ ஒரு நாள் இறப்பது நிச்சயம்.
நாம் அனைவரும் என்றோ ஒரு நாள் இறப்பது நிச்சயம்

இறைவா எமது இறப்பை இந்த கொரோனா நோயினால் ஆக்கிவிடாதே

இறைவா எமது இறப்பை இந்த கொரோனா நோயினால் ஆக்கிவிடாதே

எம் சமூகத்தின் இறப்பு நாளாந்தம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 
இறப்பவர்கள் எல்லாம் இந்தக் கொரோனா நோயால் தான் இறக்கிறார்களா என்ற அச்சம் ஒவ்வொரு உள்ளத்திலும் எழுகிறது.

முழு உலகமே புதைக்கிறது இந்த கொரோனா நோயினால் இறந்தோரை
ஆனால் இலங்கை மட்டுமே எரிக்கிறது. 
நம் இலங்கையில் மட்டும் தான் கொரோனா நோயினால் இறந்தவர்கள் எரிக்கப்படுகிறார்கள். 

கோஷங்கள் போட்டு விட்டோம் மனுக்களும் கையளித்து விட்டோம் மாற்றங்கள் எதுவும் இல்லை இறைவா!

கோஷங்கள் போட்டு விட்டோம் மனுக்களும் கையளித்து விட்டோம் மாற்றங்கள் எதுவும் இல்லை இறைவா!

மன்றாடுகிறோம் உன்னிடமே
மாற்றத்தை ஏற்படுத்திவிடு 

இறைவா மன்றாடுகிறோம் உன்னிடமே
மாற்றத்தை ஏற்படுத்திவிடு 
 
இறந்தால் எரிப்பதை இல்லாதாக்கி புதைப்பதை நிரந்தரமாக்கிவிடு

இந்த கொரோனாவினால் இறந்தால் எரிப்பதை இல்லாதாக்கி வழமைபோன்று புதைப்பதை நிரந்தரமாக்கிவிடு இறையோனே....

A M Ijran
ReDBanA
Puluthivayal.



No comments

note