கொரோனா தடுப்பில் இறங்கிய நிந்தவூர் பிரதேச சபை : சகல வாகனங்களும் தொற்று நீக்கி தெளிக்கப்படுகிறது.
நூருல் ஹுதா உமர்
கிழக்கில் 200 பேருக்கும் அதிகமானோர் கோவிட் 19 தொற்றுக்கு இலக்காகியுள்ள தற்போதைய அசாதாரண நிலையை கருத்திற்கொண்டும் அண்மையில் அமைந்துள்ள அக்கரைப்பற்று பிரதேசத்தில் அதிக கோவிட் 19 தொற்றுக்கு இலக்காகியுள்ளவர்கள் அடையாளம் காணப்படதை அடுத்து நிந்தவூர் பிரதேச சபை எல்லைக்குள் நுழைகின்றன சகல வாகனங்களும் தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு அதன் பின்னரே நிந்தவூர் பிரதேசத்திற்கு உள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றது.
சூறாவளி அபாயம் உள்ள நிலையில் கொட்டும் மழையையும் கவனத்தில் கொள்ளாது இன்று (01) காலை முதல் இந்த நடைமுறை நிந்தவூர் பிரதேச சபையினர் சம்மாந்துறை பொலிஸாருடன் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர் .
No comments