Breaking News

முன்னாள் ஜனாதிபதியைச் சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்காவுக்கும் இடையே சிறப்பு சந்திப்பு இன்று (23) நடந்தது.

உலக பேரழிவான கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.  உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கடுமையான பேரழிவாக மாறிவரும் இந் நேரத்தில் கொரோனா தொற்றுநோயால் ஏற்படும் சவால்கள் குறித்தும், அவற்றை எவ்வாறு சமாளிப்பது என்றும் அவர்கள் கலந்தாலோசித்தனர்.

இலங்கைக்கு பொருத்தமான தேசிய சுற்றுச்சூழல் கொள்கையை வகுப்பதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் ஆராய்ந்தனர் மற்றும் உலகெங்கிலும் உள்ள காலநிலை மாற்றம் குறித்த கருத்துகளையும் பரிமாறிக் கொண்டனர்.



No comments

note