Breaking News

31வருட கால ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வு பெறுகின்றார் ஆசிரியர் ஏ.எம்.இப்றாகீம்.

(சர்ஜுன் லாபீர்)

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் சமூகக் கல்வி மற்றும் வரலாறு பாட ஆசிரியராக எல்லோருடைய மனங்களிலும் இடம்பிடித்த ஆசிரியர் ஏ.எம்.இப்ராஹிம் கடந்த 26ம் திகதியுடன் தனது 36 வருட கால அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்று சென்றார்.

சாய்ந்தமருதை பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது ஆரம்ப ஆசிரியர் சேவையினை கடந்த 1989.01.02ம் திகதி கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் பட்டதாரி சமூகக்கல்வி பாட ஆசிரியராக கடமையேற்றார்.பின்னர் 1990ம் ஆண்டு கல்முனை சாஹிரா தேசிய பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று வந்து அங்கு சுமார் 23வருட காலம் கடமை புரிந்து பின்னர் 2013ம் ஆண்டு சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கும் இடமாற்றலாகி அங்கு 2020.02.20ம் திகதி வரை கடமை புரிந்து மீண்டும் சாஹிரா தேசிய பாடசாலைக்கு இடமாற்றலாகி கடந்த 26ம் திகதியுடன் தனது 31 வருடகால அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்கின்றார்.

சாய்ந்தமருது முகம்மது இஸ்மாயில் மற்றும் ஆதம்பாவா ஆசியத்து உம்மா ஆகியோரின் புதல்வரான இவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைப் பட்டம் பெற்று வெளியானவர் என்பதோடு அமைதியான சுபாவம் கொண்டவரும்,கடமையில் கண்ணியமாகவும்,நேர்மையாகவும் செயற்படுபவர் என்பதோடு எல்லோருடனும் அன்பாகவும் பண்பாகவும் பழககூடிய ஒரு நல்ல மனிதர் என்பதும் குறிப்பிடத்தக்கது.







No comments

note