புத்தளம் ஸைனபில் 28 மாணவர்கள் சித்தி
2020 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் புத்தளம் ஸைனப் முஸ்லிம் பெண்கள் ஆரம்ப பாடசாலையில் தமிழ் மொழி மூலம் 26 மாணவர்களும் சிங்கள மொழி மூலம் 02 மாணவர்களும் மொத்தம் 28 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்றுள்ளதாக அதிபர் திருமதி பெலஜியா ஹுதா தெரிவித்தார்.
தமிழ் மொழி மூலம் பரீட்சைக்குத் தோன்றியதில் முகம்மது ஷிபான் பாத்திமா உஸ்மா 191 புள்ளிகளையும் சிங்கள மொழி மூலம் பரீட்சைக்குத் தோன்றியதில் எம்.எப். பாத்திமா ருக்ஸா 175 புள்ளிகளையும் ஜெ.ஏ. விமாஸா கேஷானி 166 புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.
தமிழ் மொழி மூலம் 142 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியதில் 131 மாணவர்கள் 70 புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்றுள்ளதோடு சிங்கள மொழி மூலம் 08 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியதில் அனைவரும் 70 புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்றுள்ளனர்.
- புத்தளம் நிருபர் -
No comments