அமெரிக்காவில் 24 மணித்தியாலங்களில் 1226 கொரோனா மரணங்கள் பதிவின் மூலம் மக்கள் அதிர்ச்சி,மேலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை..
MADURAN KULI MEDIA
06/11/2020
அமெரிக்காவில் 24 மணித்தியாலங்களில் 1,20,000-இற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுடன் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
19 மாநிலங்களில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
24 மணித்தியாலங்களில் 1226 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் மக்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, பென்சில்வேனியாவில் வாக்கெண்ணும் பணிகளை நிறுத்துமாறு விடுக்கப்பட்ட ட்ரம்பின் கோரிக்கையை பென்சில்வேனியா நீதிபதி நிராகரித்துள்ளார்.
ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி பிரதிநிதிகளுக்கு வாக்கெண்ணும் நிலையங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நீதிபதி போல் டயமன்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.
எஸ்.எம்.எம்.ஸபாக் (ஜவாதி)
No comments