சவளக்கடை குட் லக் விளையாட்டுக் கழகத்தின் 15ஆவது ஆண்டு நிறைவு மர நடுகையுடன் ஆரம்பமானது !
(எம்.எம்.ஜபீர் & நூருல் ஹுதா உமர்)
அம்பாறை மாவட்ட சவளக்கடை சாளம்பைக்கேணி-02 குட் லக் விளையாட்டுக் கழகத்தின் 15ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 6ம் கிராமம் பிலால் ஜூம்மா பள்ளிவாசல் முன்னழகை விருத்தி செய்யும் நோக்குடன் மர நடுகைத் திட்டம் விளையாட்டு கழகத்தின் தலைவர் வை.பாரிஸ் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக திட்டமிடல் பிரிவுக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம். ஹைதர் அலி, 6ம் கிராமம் பிலால் ஜூம்மா பள்ளிவாசல் தலைவர் ஏ.எல். நஜிமுத்தீன், சாளம்பைக் கேணி-02 கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் யு.எல். தெளபீக், குட் லக் விளையாட்டுக் கழகத்தின் முகாமையாளர் எஸ்.ஐ.எம். முபீன், பிலால் ஜூம்மா பள்ளிவாசல் செயலாளர் மெளலவி எம்.எம். முபாரீஸ், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள், உள்ளிட்ட பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments