வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு : ஆதரவாக 151 வாக்குகள்
2021 - வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 99 வாக்கு வித்தியாசத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 17 ஆம் திகதி 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
பிரதமரால் வரவு செலவு திட்ட யோசனை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இன்று வரையில் 4 நாட்களுக்கு இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது.
அதன்படி, இன்று சற்று முன்னர் வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது. அதனடிப்படையில் வரவு செலவு திட்ட ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 52 வாக்குகளும் வழங்கப்பட்டிருந்தது.
மேலும், வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் 23 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
வரவுச் செலவு திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Update:
வாக்கெடுப்பின் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான முஷர்ரப், அலி சப்ரி ரஹீம், இஷாக் ரஹ்மான் ஆகியோர் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதேவேளை ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்ததுடன், கட்சியின் ஏனைய உறுப்பினர்களான பைசல் காசிம், ஹரீஸ், தௌபீக், நஸீர் அஹமட் ஆகியோர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
No comments