Breaking News

கல்பிட்டியில் இதுவரை 09 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! Lockdown தாமதம் ஏன்?

கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட PCR தரவுகளின் அடிப்படையில் 07 பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருந்தது, குறித்த 07 பேரும் பெலியகொடை மீன் சந்தையுடன் தொடர்பை பேணியவர்கள், பின்னர் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் மேலும் இருவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 

இதுவரையில் கல்பிட்டி பிரதேசத்தில் 09 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக பொதுஜன பெரமுன கல்பிட்டி நகர அமைப்பாளர் நாசர் தெரிவித்தார். 

மேலும் கூறுகையில் கல்பிட்டியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டும் குறித்த கிராமங்கள் முடக்கப்படாமல் இருப்பதாகவும், கல்பிட்டியின் பொது அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி LockDown செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.



No comments

note