மன்னாரில் மாவட்ட அபிவிருத்தி குழுக் காரியாலயம் திறந்து வைப்பு.
மன்னார் மாவட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும் மாவட்ட அபிவிருத்தியை துரிதப்படுத்தி நேர்த்தியான சேவையை வழங்கும் நோக்கில் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் காரியாலயமொன்று இன்றைய தினம் (19) மன்னார் மாவட்ட கச்சேரியில் காலை 9.00 மணிக்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான் உத்தியோகப்பூர்வமாக திறந்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.குணபாலன்,மேலதிக அரசாங்க அதிபர் திரு.வசந்தகுமார் மற்றும் மன்னார் மாவட்ட பிரதேச செயலகங்களின் பிரதேசச் செயலாளர்கள், பிரதம உள்ளக கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர்,சமூர்த்தி உயர் அதிகாரி, பாராளுமன்ற உறுப்பினர்களின் இணைப்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
ஊடகப்பிரிவு
No comments