தொழில் ஊக்குவிப்பு முயற்சி- மீனவர் செயற்திட்டம்.
கல்பிட்டி மண்டலக்குடா பிரதேசத்தில் வசிக்கும் சகோதரர் ஒருவரின் மீன்பிடி தொழிலை ஊக்குவிக்கும் முகமாக அவருக்கு தேவைப்பாடாக இருந்த மீன்பிடி வலைகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
சமூக ஆர்வலரும் ஊடகவியலாளருமான
இர்பான் ரிஸ்வானின் முயற்சியில் Ymma பனிப்பாளர் சகோதரர் முஜாஹித்தின் பனிப்புரைக்கினங்க YWMA அமைப்பால் இந்த தொழில் முயற்சி செய்து கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த வலைகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் குறித்த பிரதேசத்திலுள்ள மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜூம்மா பள்ளியின் தலைவர் இக்மால் மற்றும் செயலாளர் முசவ்விர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
- இர்பான் றிஸ்வான் -
No comments