தினேஷ் சந்திமால் மற்றும் திசார பெரேரா ஆகியோர் இராணுவ அதிகாரிகளாக நியமனம்...!
இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்களான தினேஷ் சந்திமால் மற்றும் திசார பெரேரா ஆகியோர் இராணுவ அதிகாரிகளாக இன்று (வெள்ளிக்கிழமை) நியமிக்கப்பட்டனர்.
இலங்கை கிரிக்கட் அணியின் முன்னணி வீரர்களான தினேஷ் சந்திமால் மற்றும் திசார பெரேரா ஆகியோர் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனெரல் சவேந்திர சில்வாவினால் இன்றைய தினம் இவ்வாறு நியமிக்கப்பட்டனர்.
மேலும் குறித்த இருவரும் தன்னார்வ இராணுவத் தளபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நியமனம் இன்று வழங்கப்பட்டுள்ள நிலையில், நியமனத்தில் பின்னர் குறித்த இரு வீரர்களும் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனெரல் சவேந்திர சில்வாவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே, இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் திஸ்ஸர பெரேரா, இராணுவப்படையின் கிரிக்கட் குழாமின் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments