புத்தளம் நகரை பாதுகாக்க மீண்டும் களமிரங்கினார் நகர முதல்வர் கே.ஏ.பாயிஸ்
கொவிட் -19 கொரோனா தொற்று இந்நாட்டின் பல மாவட்டங்களையும் ஆக்கிரமித்துவிட்டது. பல ஊர்களுக்குள் நுழையத்துவங்கியுள்ளது. அதன் அச்சுறுத்தல் புத்தளம் நகரத்தையும் நோக்கி வந்துகொண்டிருக்கின்றது.
எனவே, பொதுமக்கள் அனைவரும் இத்தொற்று நோயிலிருந்து தம்மையும், தமது குடும்பத்தையும் விஷேடமாக, நோயுள்ளவர்களையும், முதியவர்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ளீர்கள்.
அரசாங்கம், சுகாதார அமைச்சு மற்றும் பொலிஸார் விடுத்திருக்கின்ற சுகாதார அறிவுறுத்தல்களை சரிவர பின்பற்றி நடக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். மீறும்பட்சத்தில் எமது ஊரிலும் கொரோன நோய்த்தொற்று ஏற்பட்டு எமது ஊரும் தனிமைப்படுத்தப்பட்டு, முடக்கப்படும் (Lock down) நிலைக்குத்தள்ளப்படும்.
எனவே, அந்த நிலையிலிருந்து எமது ஊரை பாதுகாப்பதற்கு அனைவரும் இந்நடவடிக்கைகளை கைக்கொள்ளுங்கள். வெளியூர்களிலிருந்து வருபவர்களிடம் அவதானமாக செயற்படுங்கள்.
இந்நடைமுறைகளை நீங்கள் உங்களது மதஸ்தலங்கள், நிறுவனங்கள், கடைகள், வீடுகளில் சரிவர பின்பற்றி நடந்துகொள்வதோடு, இந்த ஆபத்திலிருந்து நம்மை நாமே காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.
அத்தோடு அண்மையில் பேலியகொடை மீன் சந்தைக்கு சென்றவர்கள் யாராவது எமது பிரதேசத்தில் காணப்பட்டால் அவர்கள் உடனடியாக PCR பரிசோதனைகளை மேற் கொள்வதற்காக புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் அல்லது புத்தளம் நகர சபையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் - 03222265201
புத்தளம் நகர சபை - 0322265275
அன்புடன்.
கே.ஏ. பாயிஸ்.
No comments