சர்வதேச வறுமை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கல்முனையில் பல்வேறுபட்ட நிகழ்வுகள்
(சர்ஜுன் லாபீர்)
சர்வதேச வறுமை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை பிரதேச செயலக பிரிவில் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது
அந்தவகையில் குறைந்த வருமானம் பெறும் மக்களை சுயலாபத்துடன் கூடிய வருமானம் பெறுவர்களாக ஆக்கும் பொருட்டு சமூர்த்தி நிவாரணம் பெறும் குடும்பங்களை இணங்கண்டு மதிப்பீடு செய்யும் கள ஆய்வு வேலைத்திட்டம், மற்றும் சமூர்த்தி அதிஸ்ட இலாப சீட்டிலுப்பு,சமூர்த்தி வீடமைப்பு செயற்திட்டம்,கல்முனை சமூர்த்தி கட்டுப்பாட்டாளர் சபை உறுப்பினர்களால் பிரதேச செயலாளர், மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் மற்றும் சமூர்த்தி முகாமையாளர்களை கெளரவித்தல், மனை பொருளாதார வீட்டு கூறுகளை மேம்படுத்தும் முகமாக வீட்டுத்தோட்டம் மேற்கொள்ளுவதற்காக மரக்கன்றுகள் வினியோகம் செய்தல்,சமூர்த்தி பயனாளிகளுக்கான சுயதொழில் கடன் உதவி வழங்கும் செயற்திட்டம் போன்ற பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்து நடைமுறைப்படுத்தும் நிகழ்வு இன்று(21) கல்முனைக்குடி சமூர்த்தி வங்கி முகாமையாளர் எம்.புவிராஜ் தலைமையில் சமூர்த்தி வங்கி வளாகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எம்.எம் நஸீர் அவர்களும் கெளரவ அதிதியாக அம்பாறை மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் எம்
எஸ்.எம் சப்றாஸ் மற்றும் விசேட அதிதிகளாக கல்முனை பிரதேச செயலக சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம் சாலீஹ்,அம்பாறை மாவட்ட சமூர்த்தி திட்ட முகாமையாளர் எம்.சமரசிங்க,கல்முனை பிரதேச செயலக சமூர்த்தி திட்ட முகாமையாளர் எ.எம் எஸ் நயீமா,சமூர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ரிபாயா,சமூர்த்தி,மருதமுனை, நற்பிட்டிமுனை முகாமையாளர் எம்.எம் முபீன்,உதவி முகாமையாளர்களான எஸ்,எல் அஸீஸ்,எம் ரி தெளபீக்,எம்.எம்.எம் மன்சூர்,சமூர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.என் எம்.நெளஸாத் உட்பட கிராம சேவர்கர்கள,சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூர்த்தி கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்கள் பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.
No comments