சிறுநீரக நோயாளிகளுக்கான மாதந்த கொடுப்பனவு வழங்கல்
(சர்ஜுன் லாபீர்)
நாடு பூராகவுமுள்ள குறைந்த வருமான பெறும் சிறுநீரக நோயாளர்களுக்கான 5000/- மாதாந்த வாழ்வாதார கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று(19)கல்முனை பிரதேச செயலகத்தில் சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ ஆர் பர்சானா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எம்.எம் நஸீர் கலந்து கொண்டு சிறப்பித்தார். அத்துடன் கெளரவ அதிதியாக பிரதேச செயலக கணக்காளர் வை ஹபிபுல்லா மற்றும் சிறப்பு அதிதியாக நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர் யூ.எல் பதுருத்தீன் ஆகியோர் கலந்து கொண்டு உதவி தொகைகளை வழங்கி வைத்தனர்.
இன்றைய நிகழ்வில் முதல் கட்டமாக 17 சிறுநீரக நோயாளிகளுக்கான பயனாளிகாளுக்கு இரண்டு மாதாங்களுக்கான கொடுப்பனவு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிறுநீரக நோயாளிகளுக்கான மாதந்த கொடுப்பனவு வழங்கல்
Reviewed by Mohamed Risan
on
October 18, 2020
Rating: 5
No comments