Breaking News

புத்தளம் மாவட்டத்தில் 6 கி.மீ. காபட் பாதைகள் அபிவிருத்தி - ஏ.எச்.எம்.றியாஸ் நடவடிக்கை.

கிராமிய வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் நிமல் லான்ஷாவை  புத்தளம் மாவட்டத்தின் பொதுஜன பெரமுன கட்சியின் முஸ்லிம் பிரதேச அமைப்பாளரும், புத்தளம் தொகுதியின் இணை அமைப்பாளரும், முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினருமான ஏ.எச்.எம். ரியாஸ்  அண்மையில் அவரது காரியாலயத்தில் சந்தித்தார்.

இதன் போது புத்தளம் மாவட்டத்தில் உள்ள பல வீதிகளை, ஜனாதிபதியின் ஒரு லட்சம் பாதைகள் அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் காபட் பாதையாகத் தரமுயர்த்துவது சம்பந்தமாக மகஜர் ஒன்றை கௌரவ அமைச்சரிடம் கையளித்தார்.

அதனைப்பெற்றுக்கொண்ட  அமைச்சர்  உடனடியாக, புளிச்சாக்குளம் தொடக்கம் உடப்பு வரையான சுமார் 2 கி.மீ காபட் பாதை,கனமூலை தொடக்கம் தொடுவா வரையிலான 2 கி.மீ காபட் பாதை, மதவாக்குளம் தொடக்கம் கடையாந்தலுவ வரையான 2 கி.மீ காபட் பாதை என 6 கி.மீ காபட் பாதைகளை அமைப்பதற்கான அனுமதியை வழங்கினார்.

இவ்வீதி அபிவிருத்திகள்  வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.எம்.எம்.ஸபாக் (ஜவாதி)




No comments

note