கம்பஹா மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு செவ்வாய்க்கிழமை முதல் ரூ.5000 கொடுப்பனவு ஆரம்பம்.
கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த நடவடிக்கைகளுக்காக 400 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செவ்வாய் கிழமையிலிருந்து முதலாவது கட்டமாக குறித்த 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
முதலாவது கட்டத்தில், லொக்டவுன் செய்யப்பட்டுள்ள 05 கிராமங்கள் உள்ளடங்களாக மினுவாங்கொட, திவுலபிடிய, வெயாங்கொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களை சேர்நதவர்களுக்கு குறித்த 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
மேலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள ஏனைய 16 பொலிஸ் பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு இரண்டாவது கட்டமாக ரூபா 5000 கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் தெரிவித்தார்.
No comments