Breaking News

வத்தளயில் உள்ள கைத்தொழிற்சாலை ஒன்றில் 49 பேருக்கு கொரோனா அதிர்வலை!

MADURAN KULI MEDIA 
31/10/2020

வத்தள பகுதியில் உள்ள கைத்தொழிற்சாலை ஒன்றில் 49 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த நிறுவனத்தில் 1000 மேற்பட்ட ஊழியர்கள் கடமையாற்றுவதாகவும் வத்தள சுகாதார வைத்திய வலயத்திற்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் வருண அபேசேகர தெரிவித்துள்ளார். 

குறித்த கைத்தொழிற்சாலையில் உள்ள 120 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையிலேயே குறித்த 49 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

குறித்த கைத்தொழிற்சாலை தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

கடந்த இரண்டு நாட்களுக்குள் ​மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் வத்தள பகுதியை சேர்ந்த 75 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர் வருண அபேசேகர தெரிவித்துள்ளார்.

எஸ்.எம்.எம்.ஸபாக் (ஜவாதி)



No comments

note