அரசாங்கத்திற்கு 48 மணிநேர கெடு விதித்தார் பிரபல தேரர்.
MADURAN KULI MEDIA
28/10/2020
கொழும்பு நாரஹேன்பிட்டிய அபயராமய விகாரையின் விகாராதிபதியும், ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவருமான முருந்தெட்டுவே ஆனந்த தேரர், அரசாங்கத்திற்கு 48 மணிநேர காலக்கெடுவை விதித்திருக்கின்றார்.
தாதியர்கள் தற்போது எதிர்கொண்டுவருகிற பிரச்சினைகளுக்கு தீர்வை இன்னும் இரண்டே தினங்களில் அரசாங்கம் முன்வைக்காவிட்டால் பாரிய வேலைநிறுத்தமொன்றை நடத்த நேரிடும் எனவும் அவர் எச்சரித்தார்.
கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் தாதியர்களில் பலருக்கு வழங்க வேண்டிய மேலதிக கொடுப்பனவுகள், போக்குவரத்து என பல விடயங்கள் தடைபட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த மூன்று மாதங்களாக நாடு முடக்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் தவறாமல் பணியில் ஈடுபட்ட தாதியர்கள் பலருக்கு தேவையான வசதிகளை அரசாங்கம் வழங்க தவறிவிட்டதாக சிங்கள இணையத்தளமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தேரர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.எம்.எம்.ஸபாக் (ஜவாதி)
No comments