Breaking News

கல்பிட்டியில் 09 பேருக்கு PCR - கொரோனா பரிசோதனை!

கல்பிட்டி ஆனவாசல் பகுதியை சேர்ந்த 09 பேருக்கு இன்று(16) PCR பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக கல்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

குறித்த 09 பேரின் குடும்பத்தினரை அவர்களது வீடுகளில் சுயதனிமையில் ஈடுபடுமாறும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

PCR பரிசோதனைகள் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகள் இடம்பெற்று வருவதாகவும், நாளை அல்லது நாளை மறுதினமே பரிசோதனை முடிவுகள் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி அஸ்வர் டொக்டர் அவர்கள் குறித்த PCR பரிசோதனையை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கல்பிட்டியில் இன்னும் கொரோனா உறுதி செய்யப்படாத நிலையில், கொரோனா பற்றிய வதந்திகளை பரப்ப வேண்டாம் என கல்பிட்டி பொலிஸ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர், 

மக்கள் மிகவும் அவதானமாகவும், சுகாரதார விதிமுறைகளை பேணி நடக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Irfan Rizwan
16/10/2020



No comments

note