ஆங்கில உயர் டிப்ளோமா தாரிகளை (HNDE) ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளக் கோரிக்கை - இம்ரான் மஹ்ரூப் எம்.பி
ஆங்கில உயர் டிப்ளோமா தாரிகளை (HNDE) ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ள ஆவன செய்யுமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரைக் கேட்டுள்ளார்.
செயலாளர் ஐ கே ஜி முத்துபன்டாவை அண்மையில் சந்தித்து திருகோணமலை மாவட்ட கல்வி அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடியபோதே இந்தக் கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.
ஆங்கில உயர் டிப்ளோமா சான்றிதழ் பெற்றோர் அண்மையில் பாராளுமன்ற உறுப்பினரை சந்தித்து நீண்ட காலமாக டிப்ளோமாதாரிகளுக்கான நியமனம் வழங்கப் படாமல் உள்ளது. எனவே தமக்கான நியமனம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதன் அடிப்படையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் இந்தக் கோரிக்கையை கல்வி அமைச்சின் செயலாளரிடம் முன் வைத்தார்,
இது குறித்து தான் நடவடிக்கை எடுப்பதாக இதன் போது கல்வி அமைச்சின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினரிடம் உறுதி அளித்தார்.
No comments