Breaking News

மதுரங்குளி ஸ்கூல் ஒப் எக்ஸலன்ஸின் ஆரம்ப பிரிவு மற்றும் பேர்ல்ஸ் ஓப் எக்ஸலன்ஸ் மாணவர்களினால் விழிப்பூட்டல் நிகழ்வு

புத்தளம் மதுரங்குளி ஸ்கூல் ஒப் எக்ஸலன்ஸின் ஆரம்ப பிரிவு பேர்ல்ஸ் ஓப் எக்ஸலன்ஸ்  மாணவர்களினால் தேசிய சுற்றுச்சூழல் தினத்தை (International Environment day) முன்னிட்டு சூழல் பாதுகாப்பு, வழி மாசடைதல்,  நீர் வளம் பாதுகாப்பு சம்பந்தமான திட்டம் விழிப்பூட்டல் செய்யப்பட்டது. 
இந்நிகழ்வானது அண்மையில்  (23) பாடசாலை வளாகத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் கல்லூரி அதிபர் எச். அஜ்மல், உதவி அதிபர் பாத்திமா பீபி, முஸ்லீம் ஹேண்ட்ஸ் செயற்திட்ட அதிகாரி ஹாரிஸ், பேர்ல்ஸ் ஓப் எக்ஸலன்ஸ்  மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின்  போது பெற்றோர்களினால் வர்ண குருவிகளும்,  கூடும், மீன் தொட்டியும் அன்பளிப்பு செய்யப்பட்டது. அத்துடன் அங்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களினால் பயன் தரும் மரங்களும் நாட்டி வைக்கப்பட்டன.
  - ஊடகப்பிரிவு - 



















No comments

note