Breaking News

பிரதமரின் அதிரடி கருத்து

MADURAN KULI MEDIA 
30/09/2020


20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் தொடர்பில் தன்னுடைய நிலைப்பாடும் அரசாங்கத்தின் நிலைப்பாடும் ஒருமித்ததே என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

ஊடக பிரதானிகளுடன் அலரி மாளிகையில் இன்று முற்பகல் நடத்திய சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உரிய நேரத்தில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வட மாகாண சபையை தாங்கள் ஏற்படுத்தியிருந்ததாக குறிப்பிட்ட பிரதமர், கடந்த ஆட்சியாளர்கள் மாகாண சபைத் தேர்தலை நடத்தவில்லை என்றும் பிரதமர் குற்றம் சுமத்தினார்.

அரசியலமைப்பின் 20ம் திருத்தச் சட்ட விவகாரத்தில், ஆளுந்தரப்புக்குள் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.

பேச்சுவார்த்தைகள் மூலம் அந்தக் கருத்துக்களை ஒருமித்த கருத்தாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.

இதேவேளை, இரண்டு ஆண்டுகளில் தாம் ஓய்வுபெறப்போவதாக கூறப்படும் கருத்துக்களின் எவ்வித உண்மையும் இல்லை என்று குறிப்பிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அரசியலில் இருந்து யார் ஓய்வு பெறுவார் என்றும் கேள்வி எழுப்பினார்.

இதேநேரம், விமான நிலையத்தை திறப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படுட்டு வருவதாகவும், நிலமை சீரடைந்த பின்னர் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

செய்தி வழங்குனர் 
எஸ்.எம்.எம்.ஸபாக் (ஜவாதி)



No comments

note