கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - கன்னி உரையில் ஹாபிஸ் நஸீர்
கொரோனா தாக்கத்தினால் மரணிக்கும் முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதை நிறுத்தி , அதனை அடக்கம் செய்வதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நசீர் அஹமட் பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.
அவர் தனது முதலாவது கன்னி உரையில் தெரிவித்ததாவது,
கடந்த பல மாதங்களாக கொரோனா தாக்கத்தினால் வெளிநாடுகளில் பணி புரியும் எமது நாட்டு இளைஞர் யுவதிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து , தொழில் இழந்து கஸ்டப்படுகின்றனர் . அவர்களை அரசாங்கம் உடனடியாக நாட்டுக்கு வரவழைக்கும் நடவடிக்கைகளை தொடங்க வேண்டும்.
அத்தோடு அவர்களுக்கான வேலைவாய்ப்புக்களை உருவாக்கி, அவர்களின் தொழில் இல்லாப் பிரச்சினைக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
அத்துடன் கிழக்கு மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்திகள் மீள த் தொடரப்பட வேண்டும் .
வாழைச்சேனையில் குடிநீர் திட்டம் முற்றுமுழுதாக முடக்கப்பட்டுள்ளது.
இதனை நிவர்த்தி செய்து சுத்தமான குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் .
ஏறாவூரில் நிர்மாணிக்கப்பட்டு வந்த நவீன பொதுச்சந்தை, கலாச்சார மண்டபம், சுற்றுலா மையப்பூங்கா போன்ற வற்றின் கட்டுமானப்பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படுவதோடு,அங்கு
கழிவுநீர் வடிகால் அமைப்புத்திட்டமும் உருவாக்கப்பட வேண்டும்.
அது மாத்திரமின்றி காத்தான்குடி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த கழிவு நீர் வடிகால் அமைப்புத்திட்டம் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் கூறிய அவர், பாராளுமன்ற உறுப்பினராக தான் தெரிவு செய்யப்பட வாக்களித்த மடடக்களப்பு மாவட்ட வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்
No comments