Breaking News

விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு விஜயம்.

முன்னாள் மாகாண  சபை உறுப்பினரும், கல்பிட்டி முந்தல் அபிவிருத்தி குழு இணை தலைவருமான ஏ.எச்.எம். ரியாஸ் அவர்களின் அழைப்பின் பேரில் இன்று(25) விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ அவர்கள் பு/கடையாமோட்டை முஸ்லிம்  மத்திய கல்லூரிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இன்றைய தினம் வருகை தந்த அமைச்சர் கடையாமோட்டை  மத்திய கல்லூரியின் குறைநிரைகளை நேரில் பார்வையிட்டதுடன், மாணவர்களிடம் நேரடியாக கலந்துரையாடி பாடசாலைக்கு தேவையான உதவிகளை தனது அமைச்சினூடாக உடனடியாக  செய்து தருவதாக வாக்குறுதியளித்ததோடு,மாகாண மட்டத்தில்  செய்ய வேண்டிய அபிவிருத்தி திட்டங்களை மாகாணத்திற்கு உத்தரவு பிரப்பிப்பதாகவும் கூறியுள்ளார்.

இதன்போது புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமாக சனத் நிசாந்த, மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம்.ரியாஸ் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.












No comments

note