மதுரங்குளி மீடியாவின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக - ஏ.எச்.எம்.றியாஸ்
மதுரங்குளி மீடியாவின் சான்றிதழ் மற்றும் நினைவுச்சின்னம் வழங்கும் நிகழ்வு 18/09/2020 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியளவில் மதுரங்குளி தொடுவா வீதியில் அமைந்திருக்கும் "ட்ரீம் மண்டபத்தில்" பு/ நல்லாந்தழுவை மு.ஆ. பாடசாலையின் அதிபர் என்.எம்.எம்.நஜீப் தலைமையில் மிக விமர்சையாக இடம்பெற்றது.
MRN & SONS , அக்கரைப்பற்று உதவி மையம், மற்றும் தைபா நிறுவனம் ஆகியோரின் அனுசரணனயில் ரமழான் மாதத்தில் நடைபெற்ற இஸ்லாமிய வினா - விடை போட்டி நிகழ்ச்சியில் பங்கு பற்றிய சுமார் 200 போட்டியாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுச் சின்னம் இதன் போது வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக எமது ஊடகத்தின் அழைப்பை ஏற்று முன்னாள் வட மேல் மாகாணசபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன புத்தளம் தொகுதி அமைப்பாளரும், கல்பிட்டி முந்தல் அபிவிருத்திக் குழு உப தலைவரும், புத்தளம் மாவட்ட இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பெரேராவின் இனைப்பாளருமான கௌரவ ஏ.எச்.எம். ரியாஸ் அவர்களும், மற்றும் சிறப்பு அதிதிகளாக கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான கே.எம்.எம். பைஸர், ஏ.ஆர்.எம்.ஜெஸீம் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழ் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கி வைத்னர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த ஏ.எச்.எம்.றியாஸ் அவர்களுக்கும், சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்த கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான கே.எம்.எம்.பைஸர், ஏ.ஆர்.எம். ஜெஸீம் ரஹ்மான் ஆகியோருக்கும் எமது அழைப்பை ஏற்று வருகை தந்த உலமாக்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், பங்குபற்றிய அனைவருக்கும் மதுரங்குளி மீடியா நிர்வாகம் சார்பாக மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
جزاك الله خيرا
நன்றி
No comments