அரேபியா யூதர்களுடன் களவாக தேனிலவு கொண்டாடுவதைவிட வெளிப்படையாக உறவாடலாம்.
இஸ்லாமியர்களின் இரண்டு புனிதஸ்தளங்களைக் கொண்ட சவூதி அரேபியாவின் ஆட்சியாளர்கள் உலக முஸ்லிம்களின் பார்வையில் இஸ்லாத்தின் பாதுகாவலர்களாக காண்பித்துக்கொண்டு, அதேநேரம் இஸ்லாத்தின் எதிரிகளான யூத சியோநிஸ்டுகளுடன் கள்ள உறவுகளை பேணிவருகின்றார்கள்.
என்னதான் இரகசிய உறவுகளை பேணிவந்தாளும் அவைகள் வெளியே கசிந்துவிடுகின்றது. அவ்வாறு ரகசியமாக இஸ்ரேலுடன் தேனிலவு கொண்டாடுவதைவிட வெளிப்படையாக ராஜதந்திர உறவுகளை மேற்கொள்வது சிறந்தது.
கடந்த 2017.09.10 திகதி அதாவது இன்றைய தினத்தில் சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொகமத் பின் சல்மான் அவர்கள் இஸ்ரேலுக்கு மிகவும் இரகசியமாக சென்று வந்ததை 2017.09.12 இல் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது.
உலகில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் மத்தியகிழக்கில் உள்ள எகிப்து, ஜோர்டான் ஆகிய இரண்டு நாடுகள் முதன்முறையாக இஸ்ரேலை அங்கீகரித்ததுடன் தூதரக உறவுகளையும் ஏற்படுத்திக்கொண்டது.
அதன்பின்பு வளைகுடா நாடுகளில் முதன்முதலாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அண்மையில் இஸ்ரேலை அங்கீகரித்ததுடன் இராஜதந்திர உறவுகளையும் ஏற்படுத்திக்கொண்டது.
இந்த இராஜதந்திர உறவுகள் அமெரிக்க ஜனாதிபதி ரம்பின் முயற்சியிலேயே நடைபெற்றுள்ளது. அதுபோல் சவூதி அரேபிய இளவரசரை இஸ்ரேலிய பிதமர் அமெரிக்காவில் சந்திப்பதற்கான ஒழுங்குகள் கடந்தவாரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
ஆனாலும் இந்த ரகசிய சந்திப்பு வெளியே கசிந்ததன் காரணமாக சவூதி இளவரசரின் பயணம் ரத்தானது.
இஸ்ரேலுக்கு நிதி உதவி செய்துவருகின்ற சியோனிச யூதரான அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் மருமகனும், சவூதி இளவரசர் பின் சல்மானும் அமெரிக்காவில் கல்வி கற்ற மிக நெருங்கிய நண்பர்கள் என்பது இங்கே கவனிக்க வேண்டிய விடயமாகும்.
இஸ்லாமியர்களின் முதலாவது கிப்லாவான மஸ்ஜிதுல் அக்ஸாவை யூதர்கள் ஆக்கிரமித்துக்கொண்டு பாலஸ்தீனர்களை அன்றாடம் கொலை செய்துவருகின்ற நிலையில், கொலைகாரர்களான ஆக்கிரமிப்பாளர்களுடன் உலக இஸ்லாமியர்களின் தலைமையகமான சவூதி அரேபியா களவாக தேனிலவு கொண்டாடுவதனை துருக்கி, ஈரான் போன்ற இஸ்லாமிய உலகமும், பாலஸ்தீன மக்களும் கடுமையாக கண்டித்துள்ளனர்.
எனவே இவ்வாறு கள்ள உறவுகளை மேற்கொள்வதனைவிட வெளிப்படையான உறவுகளை பேணுவதன் மூலம் விமர்சனங்களை தவிர்க்க முடியும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments