Breaking News

அஞ்சல் மூல வாக்களிப்புகள் நாளை முதல் ஆரம்பம்

MADURAN KULI MEDIA 
12 07 2020
NEWS ALERT

நாட்டில் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்புகள் நாளை முதல் ஆரம்பமாகின்றன.

அஞ்சல் மூல வாக்களிப்புக்காக ஏழு நாட்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்கமைய நாளை, நாளை மறுதினம் மற்றும் 15, 16, 17 ஆம் திகதிகளிலும் எதிர்வரும் 20, 21 ஆம் திகதிகளிம் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்காக தினங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

நாளைய தினம் சுகாதார சேவைகள் அதிகாரிகள் அஞ்சல் மூலம் வாக்களிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டு;ள்ளது.

சகல காவல்துறையினர், பாதுகாப்பு படையினர், சிவில் பாதுகாப்பு திணைக்களம், சுகாதார பிரிவினர் மற்றும் சகல மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் அலுவலக அதிகாரிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் சேவையாற்றும் சேவையாளர்கள் எதிர்வரும் 14, 15 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும்.

எவ்வாறாயினும் காவல்துறையினர், பாதுகாப்பு படையினர், சிவில் பாதுகாப்பு திணைக்களம், சுகாதார பிரிவினர் மற்றும் சகல மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் அலுவலக அதிகாரிகள் எதிர்வரும் 16, 17 ஆம் திகதிகளில் அஞ்சல் மூலம் வா

செய்தி வழங்குனர்
எஸ்.எம்.எம்.ஸபாக் (ஜவாதி)



No comments

note