பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கான நேரம் ஒரு மணித்தியாலத்தினால் நீடிப்பு
இம்முறை எதிர்வரும் ஓகஸ்ட் 05ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கான நேரம் ஒரு மணித்தியாலத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
இதுவரை காலமும் மு.ப. 7.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை தேர்தல்களுக்கான வாக்கெடுப்பு இடம்பெற்று வந்தது.
ஆயினும், கொரோனா பரவில் நிலை காரணமாக பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்கள் உள்ளிட்ட விடயங்களை கருத்திற்கொண்டு, வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு மேலும் ஒரு மணித்தியாலம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஓகஸ்ட் 05ஆம் திகதி, மு.ப. 7.00 - பி.ப. 5.00 மணி வரை வாக்களிக்க முடியும் என, மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், வாக்குச் சீட்டின் நீளம் 26 அங்குலமாக காணப்பட்டதை கருத்திற்கொண்டு, வாக்கெடுப்பு நேரம், மு.ப. 7.00 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை, ஒரு மணித்தியாலத்தினால் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments