கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிஸ் கைது
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் குசல் மெண்டிஸ் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பணந்துறை, கொரத்தொடுவ பகுதியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்துடன் தொடர்பிலேயே குசல் மெண்டிஸ் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில் குசல் மெண்டிஸின் கார் மோதி 64 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தே சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைதுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments