முன்னறிவித்தலின் பின்னரே இலங்கை முடங்கும் – இராணுவ தளபதி
MADURAN KULI MEDIA
I 2 07 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் மீண்டும் சமூகத் தொற்றாக மாறினால் பொதுமக்களுக்கு முன்னறிவித்தல்கள் விடுத்தே பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அல்லது நாடு முழுவதிலும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தப்படும் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
எனவே, மக்கள் பதற்றமடையாமல் இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டில் மீண்டும் அதிகளவான கொரோனாத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்த நிலையில், நேற்றுப் பல இடங்களில் மக்கள் பொருட்கள் வாங்க முண்டியடித்துள்ளனர். நாடு மீண்டும் முடக்கப்படலாம் என்ற அச்சத்தாலேயே அவர்கள் பொருள்களை வாங்குவதற்கு முண்டியடித்தனர். இந்தநிலையிலேயே இராணுவத் தளபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் பரவ ஆரம்பித்துள்ள கொரோனா வைரஸ் சமூகத் தொற்றாக மாறும் அபாயம் இல்லை என்று நான் உறுதிபடக் கூறமாட்டேன். எனவே, நாம் அனைவரும் விழிப்பாக இருந்து அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்தி வழங்குனர்
எஸ்.எம்.எம்.ஸபாக் (ஜவாதி)
No comments