காதி நீதிமன்ற முறையை இரத்து செய்யக் கோரி கோட்டை ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம்
இலங்கையில் உள்ள காதி நீதிமன்ற முறையை இரத்து செய்து, நாட்டில் புர்கா அணிவது தொடர்பான பிரச்சினைகளை தீர்க்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தி கோட்டை ரயில் நிலையத்திற்கு வெளியே 'குடிமக்கள் விசுவாசத்திற்கு நாடு' என்ற இயக்கம் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியது.
கருப்பு நிறத்திலான ஹபாயா மற்றும் புர்கா அணிந்த நிலையில் தமது முகத்தை மறைத்துக் கொண்டே பெரும்பாலான ஆர்ப்பாட்டக் காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது முஸ்லிம் சமூகத்தினை இழிவுபடுத்துவதாய் அமைந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
(டெய்லி மிரர்)
No comments