Breaking News

மாரவில இளைஞன் காய்ச்சலால் உயிரிழப்பு – முந்தல் வைத்தியசாலைக்கு பூட்டு

முந்தல் வைத்தியசாலையை தற்காலிகமாக பூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த இளைஞன் உயிரிழந்தமையால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாரவில பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இளைஞனுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதன் அறிக்கை கிடைக்கும் வரை வைத்தியசாலையை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

- இர்பான் றிஸ்வான் -



No comments

note