05 இலட்சம் ரூபா பெறுமதியான தேக்க மரக் குற்றிகள் கைப்பற்றப்பட்டன.
அனுமதிப்பத்திரமின்றி வெட்டப்பட்டு எடுத்துச் செல்லப்பட்ட சுமார் 05 இலட்சம் ரூபாய் பெறுமதி கொண்ட ஒரு தொகை தேக்க மரக் குற்றிகளை புத்தளம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இவற்றினை எடுத்துச் சென்ற இருவரையும் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
ஒரு லொறியில் வெவ்வேறு அளவில் வெட்டப்பட்ட 107 தேக்க மரக் குற்றிகளும் 07 வேப்ப மரக் குற்றிகளும் காணப்பட்டதுடன் மற்றொரு லொறியினுள் 07 அடி அளவிலான 09 தேக்க மரக் குற்றிகளும் காணப்பட்டுள்ளன. அட்டவில்லு மற்றும் மெல்லன்குளம் பகுதிகளில் மேற் கொள்ளப்பட்ட சோதனைகளின் போது இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
- புத்தளம் நிருபர் -
No comments