புத்தளத்தில் தேர்தல் பிரச்சார பணிகள் ஆரம்பம்
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்காக புத்தளம் மாவட்டத்தில் பிரச்சார பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
பிரதான கட்சி வேட்பாளர்களும் இம் முறை முதன் முறையாக கூட்டணி அமைத்து தராசு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களும் தமது தேர்தல் பிரச்சார பணிகளை ஆரம்பித்துள்ளனர்.
வேட்பாளர்கள் விருப்பு வாக்கு இலக்கங்கள் கிடைக்கப்பெறும் வரை மந்த கதியில் இடம் பெற்ற தேர்தல் பிரச்சார பணிகள் விருப்பு இலக்கங்கள் கிடைக்கபெற்றதும் சூடு பிடித்துள்ளன. சுகாதார சட்ட விதிகளைப் பின்பற்றி தேர்தல் பிரச்சார பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக சமூக வலைத்தளங்களினூடாக அதிக தேர்தல் பிரச்சார பணிகள் இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.
- புத்தளம் நிருபர் -
No comments