கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சீராஸ் முஹம்மட்டை ஆதரிக்க மு.கா தீர்மானம்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் கட்சியின் கம்பஹா மாவட்டத்திலுள்ள பிரதேச அமைப்பாளர்களை நேற்றைய தினம் (07) மள்வானையில் வைத்து சந்தித்தார்.
இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் சீராஸ் மொஹமட் அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் சீராஸ் மொஹமட் அவர்களை ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்ட கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள், சீராஸ் மொஹமட் இன் வெற்றிக்காக குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
No comments