Breaking News

ரவூப் ஹக்கீமை எதிர்ப்பவர்களும், ரவூப் ஹக்கீம் வெற்றி பெறவேண்டும் என விரும்புகிறார்கள்.

எம்.என்.எம்.யஸீர் அறபாத் - ஓட்டமாவடி.

தற்போதய சூழ்நிலையில் முஸ்லிம் சமூகம் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது.

தமது உரிமைகளை பெற்றுக் கொள்வதை விட, கடந்த காலங்களில் முன்னோர்கள் பெற்றுத் தந்த உரிமைகளை பாதுகாப்பது பெரும் பாடாக முஸ்லிம் சமூகத்திற்கு இருக்கிறது.

இவ்வாறான சூழ்நிலையிலேயே ரவூப் ஹக்கீம் போன்ற தலைவர்களின் செயற்பாடுகள் இன்னும் அதிகமாக சமூகத்தால் உணரப்படுவதை, அவரின் கடந்த கால சமூகம் சார் செயற்பாடுகள் உணர்த்துகின்றன.

அரசியல் ரீதியாக ரவூப் ஹக்கீமை எதிர்ப்பவர்களும்,சமூகம் சார்ந்த பிரச்சனைகள் வரும் போது, அவரின் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றிணைவதை நாம் பார்க்கலாம்.

ஏன் எனில் ரவூப் ஹக்கீம் மும்மொழி தேர்ச்சி கொண்டவர் என்பதோடு தேசிய,சர்வதேச உறவுகளை பலப்படுத்திக் கொண்டிருப்பவர். இவ்வாறான உறவுகளை  தங்களைத் தலைவர்களாக சொல்லிக் கொள்பவர்களால் ஏற்படுத்திக் கொள்ளமுடியவில்லை.

சிலர் தங்களின் அரசியலின் ஊடாக தங்களை பலப்படுத்திக் கொண்ட போது, ரவூப் ஹக்கீம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி செயற்படுவதிலையே தனது அரசியல் அதிகாரங்களை பயன்படுத்தினார். இனவாதிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் பெயராக இன்று ரவூப் ஹக்கிமின் பெயர் மாற்றமடைந்திருக்கிறது என்று சொன்னால் அது அவருக்காக செயற்பட்டதன் விளைவாக அல்ல மாறாக சமூகத்தின் உரிமைக்காக குரல் கொடுத்து;  பதவி துறந்து; சர்வதேசம் வரை தனது சமூகத்திற்கான அநீதிகளை எடுத்துச் சென்று சொன்னதனால் ஏற்பட்டதாகும்.

முஸ்லிம் சமூகத்தில் பல கட்சிகள் தோற்றம் பெற்றாலும், அதனை கொண்டு குறுநில மன்னர்கள் உருவாகினாலும்,  அவர்கள் உட்பட அவர்களின் ஆதரவாளர்களும் சமூக பிரச்சனை வரும் போது அதனை ரவூப் ஹக்கீம் பார்த்துக் கொள்வார் என நம்புகிறார்கள். தேசிய அரசியலில் தவிர்க்கமுடியாத நபராக இன்று ரவூப் ஹக்கீம் மிளிர்கிறார்.

எனவேதான் ரவூப் ஹக்கீம் அவர்களின் வெற்றி சமூகத்திற்கு இன்றியமையாத ஒன்றாக காணப்படுகிறது. 

இனவாதத்திற்கு எதிரான தலைவராக ரவூப் ஹக்கீம் தனது  வாழ்வில் எல்லா சந்தர்ப்பங்களிலும் செயற்பட்டுள்ளார். இதன் காரணமாகவே மூவின மக்களின் ஆதரவுடன் கடந்த காலங்களில் கண்டி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.

இம் முறையும் ரவூப் ஹக்கீமுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளை முறியடித்து கண்டிய மூவின மக்களின் ஆதரவோடு மீண்டும் பாராளுமன்றம் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறார்.
இன்ஷா அல்லாஹ் மீண்டும் பாராளுமன்றத்தில் எமது தேசியத்திற்கான குரலாக ரவூப் ஹக்கீம் தெரிவு செய்யப்படுவார்.

☎X 1x
கண்டி மாவட்டம்.



No comments