Breaking News

புத்தளத்தில் இரண்டு முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை பெற வாய்ப்பு - நகர பிதா கே.ஏ. பாயிஸ் தெரிவிப்பு

புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் ஒன்றுபட்டுள்ள நிலையில், இரண்டு முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை பெற்றுக்கொள்ளும் அரிய வாய்ப்பு உருவாகியிருப்பதாக, தராசு சின்னத்தில் இல 3ல் போட்டியிடும்  புத்தளம் நகர பிதாவும், முன்னால் பிரதி அமைச்சருமான கே.ஏ. பாயிஸ் தெரிவித்தார்.


இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது,

கடந்த 34 வருடங்களாக புத்தளம் மாவட்டத்தில் இல்லாமல் இருந்த, சிறுபான்மை  பிரதிநிதித்துவமும், புத்தளம் தொகுதிக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் இம்முறை கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனை உரியமுறையில் மாவட்ட முஸ்லிம்கள் பயன்படுத்த வேண்டும்.


நாங்கள் தேர்தல்  பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளளோம். முஸ்லிம் பகுதிகளில் மாத்திரமின்றி எல்லா பிரதேசங்களிலும்   எங்களுக்கு அமோக வரவேற்பு கிடைக்கிறது. நாங்கள் தனித்துவமாகவும், ஒற்றுமையாகவும் போட்டியிடுவதை மக்கள் விரும்புகிறார்கள். அதற்கு சிறந்த வரவேற்பு  ஏற்பட்டுள்ளது.


இம்முறை மேலும் 30,000  வாக்குகளை பெறுகின்ற போதே எமக்கு முதலாவது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்துக்கான வாய்ப்பு உறுவாகின்றது. மேலும் ஒரு பிரதிநிதியை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைகின்ற எமக்கு 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் எமது தரப்புக்கு கிடைத்தால், மற்றும்மொரு பிரதிநிதியும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும் என்றார். இந்த சந்தர்ப்பம் அதிகமாகவே தென்படுகிறது.


கடந்த காலங்களில் எமது மக்களின் வாக்குகளின் உதவியுடன், வேறு பலர் பாராளுமன்ற உறுப்பினர்களாகினர். 


எனினும் அதற்கு இம்முறை முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, எமது மக்களின்  பெறுமதிமிக்க வாக்குகளின் உதவியுடன் முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவாகக்கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளது என்றார். இது புத்தளம் தேர்தல் தொகுதியின் மூவின மக்களினதும் வெற்றி என்பதுடன், புத்தளம் மாவட்ட சிறுபான்மை சமூகத்தின் வெற்றி எனவும் குறிப்பிட்டார்.




No comments