Breaking News

சவூதியில் உள்ள இலங்கையர்களுக்கு இலங்கைத் தூதரகம் விடுக்கும் முக்கிய அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்புக் காரணமாக சவூதி அரேபியாவிலிருந்து இலங்கை செல்ல விரும்புவோர்களுக்கு சவூதியில் உள்ள இலங்கைத் துாதரகம் தற்போது அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.


சவூதி அரேபியாவில் இருந்து இறுதி வெளியேற்றம் அதாவது Final Exit  செல்லவிருப்பவர்கள் மற்றும் விசா வழங்கப்பட்டவர்கள் அதே போல் மீள் திரும்பல் அதாவது Re Entry விசாக்கள் வழங்கப்பட்டவர்கள் போன்ற அனைவரும் இலங்கைத் துாதரகத்தினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டும் துாதரக முகநுால் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்து அதனுாடாகவும் தகவல்களை வழங்கி பதிவு செய்து கொள்ளும் படி வேண்டப்பட்டிருக்கின்றார்கள்.


இம்மாதம் 14ம் திகதி முதல் 20ம் வரை காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணிக்குட்பட்ட நேரத்தில் துாதரகத்தினை தொடர்பு கொள்ள முடியும் எனவும் சிங்கள-தமிழ் மொழிகளில் உரையாடி தகவல்களை வழங்க முடியும் எனவும் துாதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திரு. சுதாரகா - 0530205812 (சிங்கள மொழி)
திருமதி: செல்வி (தமிழ் மொழி) 0583149627
திரு. அலி 0599069488 (தமிழ் மொழி),
திரு சாஜித் 0569658155 (தமிழ் மொழி)

ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.




No comments