தனது வாழ்நாளை மலையக மக்களின் நலனுக்காகவே செலவிட்டார் - அனுதாப செய்தியில் புத்தளம் நகர முதல்வர் கே.ஏ.பாயிஸ்
காலம் சென்ற அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
நேற்று அகால மரணமான அன்னார் தனது வாழ்நாளை மலையக மக்களின் நலனுக்காகவே செலவிட்டார். அன்னாரது இழப்பு மலையக மக்களுக்கும் மற்றும் ஏனைய சிறுபான்மை மக்களுக்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும்.
அவரது இழப்பினால் துயருரும் அனைத்து இலங்கை வாழ் மக்களுக்கும், குறிப்பாக மலையக மக்களுக்கும், அன்னாரது குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
No comments