Breaking News

பள்ளிவாசல்களை மீண்டும் திறக்க அனுமதி ? முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்.

கட்டம் கட்டமாக ஒவ்வொரு துறைசார்ந்த நிறுவனங்களையும் திறப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கி வருகிறது.

இந்த வகையில் சுகாதார அமைச்சினால் அதனது இணையத்தளத்தில் 28 ஆம் தேதி ஒரு கால அட்டவணை பிரசுரிக்கப்பட்டது.

அதன்படி பள்ளிவாயல்கள் மட்டுமல்ல அனைத்து மத ஸ்தலங்களும் ஜூன் 8 ஆம் திகதிக்குப் பின்னர் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த அனுமதி வழங்கப்பட்டு இருப்பதானது ஒரு நல்ல செய்தி என்றாலும் கூட்டு வணக்க வழிபாடுகளுக்கு இந்த அனுமதியில் இடமளிக்கப்படவில்லை.

ஆகையினால் நாம் பள்ளிவாயலை திறக்கின்ற போது கூட்டு தொழுகைக்கும் சேர்த்து அனுமதி கொடுப்பதற்காக அதிகாரிகளுடன் பேசிக் கொண்டிருக்கின்றோம்.


ஏ.பி. எம். அஷ்ரப்
பணிப்பாளர்/ வக்ப் சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்.



No comments