றினோசாவுக்கு கொரோனா தொற்று இல்லாமலே, உடல் எரிக்கப்பட்டமை அம்பலம்!
மோதரையைச் சேர்ந்த 52 வயது பெண்மணி கொரோனாவால் மரணிக்கவில்லையென தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மருத்துவ ஆய்வுகூட நிபுணர் அமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
கடந்த 5ம் திகதி வெளியான தேசிய வைத்தியசாலை தாதி ஒருவர், ராஜகிரிய, கொலன்னாவை மற்றும் மோதரையைச் சேர்ந்த மரணித்த 52 வயது பெண்மணி ஆகிய நால்வரின் PCR பரிசோதனையை மீண்டும் சுகாதார அமைச்சின் கீழுள்ள ஆய்வகங்களில் பரிசோதித்த போது அவற்றில் குறைபாடுகள் இருந்தமை கண்டறியப்பட்டன. இதுவரை இவ்வாறான 13 PCR பரிசோதனை அறிக்கையில் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
அண்மையில் செய்யப்பட்ட பரிசோதனைகளில் மாத்திரம் சிறீ ஜயவர்தன ஆய்வகத்தின் 8, கொழும்பு பல்கலைக்கழக ஆய்வுகூடத்தின் 4, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 1 பெறுபேறுமாக 13 பெறுபேறுகளில் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் சுகாதார அமைச்சின் கீழுள்ள ஆய்வகங்களில் இதுவரை இவ்வாறான குறைபாடுகள் இடம்பெறவில்லை.
PCR சோதனைக்காக மாத்திரம் சுகாதார அமைச்சின் கீழ் 10 ஆய்வகங்களில் சுமார் 200 நிபுணர்கள் இதற்காக தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments