Breaking News

இன்றைய செய்திச்சுருக்கம்

🌐MADURAN KULI MEDIA 🌐

07 05 2020
 
News update

💥வெலிசர முகாமில் உள்ள கடற்படை தம்பதியின் ஒரு வயதும் ஒரு மாதமும் நிரம்பிய சிசுவுக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

💥கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்புறுதி வழங்கும் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

💥சுகாதார நடைமுறைகளை பின்பற்றிய தொழில் திணைக்களத்திற்குட்பட்ட 11 நிறுவனங்களை எதிர்வரும் 11 ஆம் திகதி திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தொழில் ஆணையாளர் நாயகம் ஏ.விமலவீர இதனை தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய சேவையாளர்களை மாத்திரம் ஈடுபடுத்தி இந்த நிறுவனங்களின் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

💥ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை 6 மணி முதல் 12 மணி வரையிலான காலப்பகுதிக்குள் ஊரடங்கினை மீறிய 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 36 வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

செய்தி ஆசிரியர் 
S.M.M.SHAFAQ (JAWADHI)




No comments