Breaking News

சடலங்களை எரிக்கும் செயற்பாடு- தொடர்ந்தும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் - அலிஸாஹிர் மௌலானா

சடலங்களை எரிக்கும் செயற்பாடு - தொடர்ந்தும்  சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் அலி ஸாஹிர் மௌலானா, அல்ஜெஸீரா வை தொடர்ந்து துருக்கிய அரச ஊடகத்திற்கும் செவ்வி...

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் இலங்கை முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிப்பது தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களால் சர்வதேசத்தின் கவனத்திற்கு தொடராக கொண்டு செல்லப்பட்டு வருகிறது ..

குறித்த விடயம் தொடர்பில் கடந்த  2 தினங்களுக்கு முன்னர் அல் ஜெஸீரா (Al Jazeera)சர்வதேச ஊடகத்திற்கு இது தொடர்பில் வழங்கிய செவ்வி வெளியாகி இருந்த நிலையில், 

இன்றைய தினம் துருக்கி நாட்டின் அரச ஊடக தொலைக்காட்சி அலைவரிசையான Anadolu Agency இற்கு வீடியோ நேர்காணல் ஊடாக இன்று இரவு தெளிவுபடுத்தினார்.

இதன்போது சர்வதேச விதிமுறைகளையும் வழிகாட்டல்களையும்  தாண்டி  உடலங்கள் எரிப்பதற்கான தனது கண்டனத்தையும் தெரிவித்ததுடன் , சர்வதேச அழுத்தங்களின் அவசியமும் இதன்போது அலி ஸாஹிர் மௌலானா அவர்கள் வலியுறுத்தினார்கள்..





No comments