முஸ்லிம் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிரான மனு சார்பில் பைசர் முஸ்தபாவும் களத்தில்
"கொவிட் 19" கொரோனா தொற்று நோய் காரணமாக உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பிற்கு எதிராக, மற்றுமொரு மனுவொன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனு சார்பில் முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா நேரடியாகவே ஆஜராகவுள்ளார்.
புறக்கோட்டை பள்ளிவாசல்கள் சம்மேனத்தின் செயலாளர் ஏ.எச்.எம். நஸார் மற்றும் சட்டத்தரணி ஏ.சீ.எம். பெனாஸீர் ஆகியோரினால் இந்த மனு தாக்கல் செயயப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
"கொவிட் 19" நோய் காரணமாக உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பிற்கு எதிரான குறித்த மனு, (12) செவ்வாய்க்கிழமையன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு - பலஹத்துறை, கொழும்பு - மருதானை, தெஹிவளை - கல்கிசை, கொழும்பு - மோதரை ஆகிய நான்கு இடங்களைச் சேர்ந்த நான்கு ஜனாஸாக்கள், இதுவரை தகனம் செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
( ஐ. ஏ. காதிர் கான் )
No comments